ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளை ஒட்டி சென்னை ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், " விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியதை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன். அதைப் பாராட்டி சமூக ஊடக பக்கங்களிலும் பதிவு செய்து இருக்கிறேன். சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையையும் அளிக்கிறது.
பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மட்டுமல்ல. சமூக நீதி நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதைக் கண்டு உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். பெரியார் என்ற செல்ல பாஜகவிற்கு பிடிக்காது. ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டேன் என்று வெளியேறியவர். அந்த அளவிற்கு பாஜகவினருக்கு பெரியார் மீது ஒரு வெறுப்பு உள்ளது.
மூக்கு அறுபட்டவர்களின் கூச்சல் மற்றும் புலம்பல் இது. பாஜக எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது. இப்போது தேர்தல் கணக்கு கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள். கூச்சல் எழுப்பினார்கள், எப்படியாவது கூட்டணியில் விரிசல் அடையாத பிளவு ஏற்படாதா என்று காத்து கிடந்தார்கள். எதிர்பார்த்து இருந்தார்கள், ஏமாந்து போனார்கள். அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்படுகிறது.
விசிகவும், திமுகவும் ஒரே நேர்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது. முரண்பாடான அரசியல் தான். ஆனால் இணைந்து பயணிப்போம் என்கிற முடிவு கொள்கை தளத்தில் இருவரும் இணையாக இருக்கிறோம் என்று உணர்த்துகிறது. திமுகவும், விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. விசிக தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம். திமுக விற்கும் அதில் உடன்பாடு உள்ளது. அன்றே அண்ணா அந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றாக வேண்டும் என்று எதுவும் கிடையாது" என கூறினார்.
மேலும் படிக்க | திமுக முப்பெரும் விழாவில் மு.கருணாநிதி உரை... ஏஐ மூலம் நடந்த அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ