மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு!!

தேனி மாவட்டம் குன்னூர் பகுதியை சேந்த முனியாண்டி என்ற முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated : Feb 14, 2019, 10:34 AM IST
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு!!

தேனி மாவட்டம் குன்னூர் பகுதியை சேந்த முனியாண்டி என்ற முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த குன்னூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இலங்கை அகதியான இவர் தனது மகன் பாலமுருகனுக்கு வெளிநாட்டில் வேலை பெற சென்னையை சேர்ந்த மரிய செல்வம் என்பவரிடம் ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத காயத்துடன் முனியாண்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More Stories

Trending News