ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செயததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்கேநகரில் ஏப்ரல் 12-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது.
இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கதக்கது. குறிப்பாக நேர்மயைாக தேர்தல் நடத்தும் சூழ்நிலையில் வரும் போது தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருப்பது, மீண்டும் தேர்தல் நடந்தால் பணப்பட்டுவாடா நடக்கும் என கூறியவர்களுக்கு பதிலடி என்று தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.