TN Assembly Elections Result 2021: தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப முதலே திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலவரபப்டி தமிழ்நாடு தேர்தல் முன்னணி நிலவரம்:
திமுக கூட்டணி -94
அதிமுக கூட்டணி -62
மக்கள் நீதி மய்யம் -1
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட கொளத்தூர் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.
முன்னதாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் தங்கவேலு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்டு, அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலை.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் முன்னிலை. அவரை எதிர்த்து போட்டியிட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்துள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR