அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்; பாதுகாக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் , கமுதி உள்ளிட்ட பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் இனம் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருப்பதால் அதனை பாதுகாக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2022, 01:39 PM IST
  • தற்போது நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அலைவரிசை கோபுரங்கள் அதிகளவில் அமைக்கப்படுகின்றன.
  • சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக உலா வருவதை பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது.
  • முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் இனம் அழியும் நிலை உருவாகியுள்ளது.
அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்; பாதுகாக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தல் title=

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் , கமுதி உள்ளிட்ட பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் இனம் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருப்பதால் அதனை பாதுகாக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். பறவை இனங்களிலேயே மிகச் சிறியதாகவும் அனைவரையும் கவரும் வகையில் ஒலி எழுப்பும் பறவை சிட்டுக்குருவிகள் தான். இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பறவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் வயல் வெளிகளிலும் சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படும்.நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள், சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும் அதிலுள்ள துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை சிட்டுக்குருவிகள், காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழும். ஆனால் தற்போது அனைத்து தானியங்களும் பிளாஸ்டிக் பைகளில் பொதி செய்யப்படுவதால் சிட்டுக்குருவிகளுக்கு தேவையான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது.

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

அத்துடன் தற்போது நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அலைவரிசை கோபுரங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாக கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் இனம் அழியும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

தற்போதுள்ள நிலையில், சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக உலா வருவதை பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது. தொலைக்காட்சிகள் மற்றும் படங்களில் பார்த்து வரும் சிட்டுக் குருவிகளை தற்போது நேரடியாக பார்ப்பது அரிதாக உள்ளது. இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க வேண்டும் வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News