குரூப்-4-க்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 வரை கால நீட்டிப்பு!

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Last Updated : Dec 15, 2017, 07:31 PM IST
குரூப்-4-க்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 வரை கால நீட்டிப்பு! title=

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , வி.ஏ.ஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்து தேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. 

செலவை குறைக்கும் வகையில் இரண்டு தேர்வையும் ஒன்றாக இணைந்து சி.சி.எஸ்.இ-4 என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான சிசிஎஸ்இ-4 தேர்வுகள் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. விண்ணப்ப கட்டணத்தை டிசம்பர் 21-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News