FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - | Edited by - Mukesh M | Last Updated : Dec 18, 2019, 09:34 AM IST
FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்... title=

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய பொருளாதார நிலை குறித்து பேச சிதம்பரத்திற்கு யோக்கியதை கிடையாது... சிதம்பரத்தை தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பினால் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வரும்' என எச்.ராஜா தாக்கு

மத அடிப்படையில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ்,  AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, திரிணாமூல் காங்கிரஸ், ஜாமியத் உலேமா ஏ ஹிந்த், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டோர் தரப்பிலான 59 மனுக்கல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்…
 
CAA மற்றும் NRC பிரச்சினையில் பீகாரிலும் சூறாவளி… பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன பேரணி... பல மாவட்டங்களில் பொது மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் 

ஜெய்ப்பூரில் கடும் குளிரையொட்டி பள்ளிகளின் அலுவல் நேரம் மாற்றம்..  காலை 9 மணிக்கு முன் தனியார் பள்ளிகள் திறக்கப்படாது, அரசு பள்ளிகள் காலை 10 மணிக்கு முன் திறக்கப்படாது ..
 
குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் மனுக்கள்… உச்ச நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறைக்கு முன்னர் கடைசி வேலை நாளான இன்று விசாரிக்கப்படுவதால் குறைந்தபட்சம் சட்டத்துக்கு தடையை பெற மனுதாரர்கள் முயற்சி காலை 11.30 மணியளவில் விசாரணை. 
 
செவ்வாயன்று சென்னை பல்கலைக்கழகத்துக்குள் போலீஸார் நுழைந்ததால் பரபரப்பு, பாதுகாக்க வந்ததாக கூறிவிட்டு இரண்டு மாணவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
 
ஆபாச தளங்களுக்கு தடை விதியுங்கள்... பிரதமர் நரேந்திர மோடிக்கு பிகார் முதல்வர் நிதீஷ்குமார் கடிதம்
 
ஆண் - பெண் விகிதாசாரத்தில் பாக்., 151வது இடத்தில் உள்ளது. ஐஸ்லாந்துக்கு முதலிடம்...

ஆண் - பெண் விகிதாசாரத்தில் பெண்களின் நிலை.. . 112வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா. உலகப் பொருளாதார அமைப்பு ஆண்டு அறிக்கையில் தகவல்
 
தெலுங்கானாவின் கரீம்நகரில் 9 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… கேபிள் டிவி ஊழியர் மீது பெண்ணின் கணவர் புகார்...

டெல்லியின் ஜாபராபாத்தில் பள்ளிப் பேருந்து மீது கல் வீச்சு..  போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசி பதிலடி 
 
டெல்லியின் சீலாம்பூரில் வன்முறையாளர்கள் டீ கடைக்குள்பதுங்கி தாக்குதல் ... 15 போலீசார் உட்பட 21 பேர் காயம்
 
கலவரத்தால் தில்லியில் மூடப்பட்ட 7 மெட்ரோ நிலையங்கள் திறப்பு… நொய்டா டெல்லி மார்க்கத்தின் டி.என்.டி, ஆசிரமம் மற்றும் லஜ்பத் நகரில் பயணிகள் நெரிசல்… 
 
உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கரில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக வன்முறை… கலவரக்காரர்கள் கடைகளை சூறையாடியதோடு  போலீசார் மீதும் கல் வீச்சு... போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை 
 
குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு… குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டுகோள்
 
லக்னோ சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்… பாஜகவின் நந்த கிஷோருக்கு ஆதரவு… துணைமுதல்வர் தலையீட்டால் சமரசம்  
 
உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளி அலுவல் நேரம் மாற்றம்… மாணவர்கள் நிம்மதி
 
குல்தீப் செங்கர் தண்டனை விவரம் ஒத்தி… டிசம்பர் 20ல் தீர்ப்பு… பாதிக்கப்பட்ட அபலைக்கு இழப்பீடு தருவது குறித்து விவாதம்… வருவாய் சான்றிதழை தாக்கல் செய்ய செங்கருக்கு உத்தரவு
 
யோகி அரசு இரண்டாவது இடைக்கால பட்ஜெட் தாக்கல்... 42 ஆயிரம் கோடி நிதியில் திட்டம்
 
மத்தியப்பிரதேசத்தில் 23 MCNUJC பல்கலைக்கழக மாணவர்கள் டிஸ்மிஸ்… ஆசிரியர்கள் பணிநீக்கம் தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றதற்காக நடவடிக்கை… மாணவர்களுக்காக முன்னாள் முதல்வர் சிவராஜ் ஆதரவு…
 
மத்தியப்பிரதேச சாஞ்சி கூட்டுறவு பால் ஒன்றியத்தில் கலப்பட பாலை ஏற்றிவந்த டேங்கர் உரிமையாளருக்கு தடை… போலீஸார் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு… கண்காணிப்பை அதிகரிக்க அமைச்சர் உத்தரவு
 
மத்தியப்பிரதேசத்தின் கார்க் அணை நீர் மாசுபாடால் துர்நாற்றம்… நிலைமையை அறிய ஆட்சியர் நடந்து சென்று அதிரடி ஆய்வு...சிசிடிவி ஆதாரத்தின்படி நடவடிக்கை எடுக்க உறுதி
 
மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடடிக்கை… பிரபல மாபியா ராஜு குக்ரேஜா வீடு புல்டோசரால் தரைமட்டம்… ஜபல்பூரிலும் நடவடிக்கை எடுக்க முடிவு
 
மத்தியப்பிரதேசத்தின் தாமோவில் பயங்கர ஆயுதத்துடன் மிரட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… பதிலுக்கு தாக்கப்பட்டதால் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
 
சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு… மகாத்மா, நேரு, ராஜிவ், இந்திரா பெயரில் 5 அம் நலத்திட்டங்கள் அறிவிப்பு...
 
கஜூராஹோவில் 7 நாள் சர்வதேச திரைப்படவிழா... மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் தொடக்கம்… 
 
ஜபல்பூரில் காய்கறிச்சந்தையில் 600 கிலோ வெங்காயம் கொள்ளை… வெங்காயத் திருட்டு அதிகரிப்பால் வியாபாரிகள் புலம்பல்
 
பெண்களுக்காக மத்தியப் பிரதேச அரசு சிறப்பு திட்டம்… பெண்கள் சிறப்பு மாநாட்டில் முதல்வர் அசோக் கெல்லாட் அறிவிப்பு… பெண்களுக்கு இலவச கணினி மற்றும் தொழிற்பயிற்சி ... இந்திராகாந்தி பெயரில் நலத்திட்டங்கள் தொடரும் என தகவல்...
 
ராஜஸ்தானில், பாஜகவின் 25 புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்...தேர்தல் அதிகாரி ராஜேந்திர கெஹ்லாட் உத்தரவு  
 
ராஜஸ்தானில் பள்ளி விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு தேர்வு தேதியை நீட்டிக்க கோரிக்கை MP-க்கள்  கீரோடிலால் மீனா மற்றும் சுமன் சர்மா தலைமையில் மாணவர்கள் பேரணி… கிளர்ச்சியை கட்டுப்படுத்த லேசான தடியடி
 
சுருவின் பிதீசர் கிராமத்தில் ஆசிரியர் அநாகரிகம்… 19 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக புகார்… நடவடிக்கை எடுக்க கல்வித்துறை விசாரணை .
 
பிங்க் சிட்டி வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இன்று  தீர்ப்பு… 11 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெய்ப்பூரில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சம்பவம்… 
 
ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் இன்று குடிநீர் விநியோகம் தடை முக்கிய நீரேற்றுநிலையம் பராமரிப்பு…மாலை 6 மணி வரை தண்ணீர் வழங்கப்படாது என மாநகராட்சி அறிவிப்பு

காங்கிரஸ் வாக்கு வங்கியை உருவாக்க விரும்கிறார்கள்... எங்கள் அரசாங்கம் லட்சம், கோடி கணக்கான மக்களுக்கு குடியுரிமை வழங்கிய விம்பியது. அதன் விளைவாகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது... அமித் ஷா பேச்சு
 
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை .. மொத்தம் 59 மனுக்கள் தாக்கல்  ...

IPL 2020 தொடர் வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஜி.பெரியசாமி, சாய் கிஷோர் உள்பட தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இந்த ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
 
CBSE 2020 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வாரியத் தேர்வு  அட்டவணை வெளியீடு… பிப்ரவரி 15 முதல் தொடக்கம் .. மார்ச் 20 வரை 10 ஆம் வகுப்பு தேர்வுகள் 
 
CBSE 2020 ஆம் ஆண்டு 12 ஆம் வாரியத் தேர்வுகளுக்கான அட்டவணை மற்றும் தேதி தாளை வெளியீடு தேர்வுகள் 2020 பிப்ரவரி 15 முதல் தொடங்கும் .. மார்ச் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் ..
 
நிர்பயா கொலையாளி அக்ஷயின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றம்…
 
அமரபாலி அடுக்குமாடி குடியிருப்பு மோசடி வழக்கு  விசாரணை... ஜே.பி. மோர்கனின் பங்கு குறித்து உச்ச நீதிமன்றம் கடும் நிலைப்பாடு 

இந்திய அமைதிப்படைக்கு ஐ.நா., பதக்கம் தெற்கு சூடானில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், 850 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக கௌரவிப்பு

பயங்கரவாதத்தை அழிக்க 'ரபேல்' போதும்... பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க எல்லை தாண்டி செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை 
ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு

குடியுரிமை திருச்ச சட்டம் நேரு-லியாகத் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி... 70 ஆண்டுகளாக காங்கிரஸ் செயல்படுத்தாத திட்டத்தினை பாஜக செய்துள்ளது... டெல்லியின் துவாரகா பேரணியில் அமித் ஷா பேச்சு...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) என்ற பெயரில் "இந்திய முஸ்லிம்களை பயமுறுத்துவதற்கான சூழலை காங்கிரஸ் உண்டாக்குகிறது... பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

துருக்கியின் ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் 3½ கி.மீ. தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசார பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு இன்று முதல் 23-ஆம் தேதி வரை 6 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Trending News