விருதுநகர்: வியாழக்கிழமை அதிகாலையில் விருதுநகரின் (Virudhunagar) வள்ளி மில்லில் வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான ஒரு பட்டாசுக் கடையில் (Fire Cracker Shop) தீப்பிடித்தது.
கொரோனா தொற்றுநோயால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக இந்தக் கடை மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
கடை அருகே இருந்த ஒரு மின் விளக்குப் கம்பி பழுதுபட்டிருந்ததாகவும், அது இக்கடையில் தீ பிடிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ALSO READ: மூதாட்டியின் வீட்டில் பணம், நகையை கொள்ளையடித்த குரங்கு கும்பல்!!
சிறிது நேரத்திலேயே தீயின் வீரியம் அதிகரித்தது. முழு பகுதியும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்தில் வந்து நடவடிக்கை எடுத்ததால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீ பற்றியது பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே அவ்விடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த கடையின் அருகில் ஒரு பெட்ரோல் நிலையமும் (Petrol Bunk) உள்ளது. தீ அந்த பெட்ரோல் நிலையத்தை அடைவதற்குள் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவர்கள் துரிதமாக செயல்படாவிட்டிருந்தால், பெரிய விபத்து நேர்ந்திருக்கக் கூடும்.
இந்த தீ விபத்து (Fire Accident) காரணமாக ஏற்பட்ட இழப்பின் அளவு 3 லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என மதிபிடப்பட்டுள்ளது.
ALSO READ: கேரள நிலச்சரிவில் இறந்த தமிழக தேயிலைத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிதி உதவி: EPS