புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 9 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated: Mar 25, 2020, 04:16 PM IST
புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 9 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

கிட்டத்தட்ட முழு நாடும் கொரோனா வைரஸின் பிடியில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 69 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் மதுரையில் 54 வயது நபர் இறந்தார். 

எனவே கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இதேபோல் புதுச்சேரி மற்றும் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.