இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரலாம்!..ப.சிதம்பரம் எச்சரிக்கை

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.  

Written by - Chithira Rekha | Last Updated : Apr 14, 2022, 11:33 AM IST
  • 7%-ஐ தாண்டிய நாட்டின் சில்லறை பணவீக்கம்
  • இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரலாம்
  • மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கை
இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரலாம்!..ப.சிதம்பரம் எச்சரிக்கை title=

சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டிவிட்டதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டார். தவறான பொருளாதாரக் கொள்கைகளைப் மத்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | இந்தியாவுக்கு இலங்கை சொல்லும் ‘ரகசியம்’ என்ன ?

மத்திய அரசால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை என விமர்சித்த அவர், ஏராளமான கடன் வாங்கி எதற்கு செலவு செய்கிறார்கள் என்றே தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ஒரே நாடு - ஒரே தேர்வு - ஒரே தேர்தல் - ஒரே உணவு முறை என்றால் இது சமதர்ம நாடா அல்லது சர்வாதிகார நாடா எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் இதே எச்சரிக்கையை விடுத்தனர். பல்வேறு மாநில அரசுகள் அறிவிக்கும் இலவச திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு செல்லும் எனவும், மாநில நிதி நிலைமையை சீரமைக்காமல் இருந்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ளது  போன்ற பொருளாதார நெருக்கடியை நாமும் சந்திக்க நேரிடும் எனவும்  அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் எச்சரித்தனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளால் இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. 

மேலும் படிக்க | இலங்கையில் அவசர நிலை பிரகடனம், அதிபர் முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News