முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவிலிருந்து நீக்கம்

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். 

Last Updated : Apr 16, 2019, 10:26 AM IST
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவிலிருந்து நீக்கம் title=

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். 

தருமபுரியைச் சேர்ந்த திமுக நிர்வாகி முல்லைவேந்தன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து, முல்லை வேந்தன் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 

Trending News