பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.81 என்ற அளவிலும், டீசல் ரூ.91.88 என்ற அளவிலும் நீடித்து வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களுக்கு முன்னால் உயரத் துவங்கியது. கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. 137 நாட்களுக்குப் பிறகு , அதிகரிக்க தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
சென்னையில், நேற்று பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69 என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76 என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் அதிகரிக்கப்பட்டு 97.52 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரொவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில் ரஷிய-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR