Chennai Metro பயணிகளுக்கு நல்ல செய்தி: பயண அட்டை செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2021, 01:09 PM IST
  • கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறைந்து வருகிறது.
  • மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இது தொடர்பான அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Chennai Metro பயணிகளுக்கு நல்ல செய்தி: பயண அட்டை செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. 

இம்மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டீக்கப்பட்டுள்ள ஊரடங்கில் (Lockdown) பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள சென்னை போன்ற இடங்களில் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பி விட்டது என்றே கூறலாம். கடந்த 21 ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை 50 சதவிகித பயணிகளுடன் தொடங்கியது.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பயண அட்டையின் செல்லுபடியாகும் கலாம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Rail) நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதில், " சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயண அட்டை உபயோகிக்கும் பயணிகளுக்காக கொரோனாவால் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு காலமான மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை, அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Petrol Rate: ரூ.,100 நெருங்கும் பெட்ரோல் விலை, சென்னை வாசிகள் அதிர்ச்சி

எனவே பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக்கொள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகலாம். முறையே கொரோனா ஊரடங்கு காலத்தில் கியூ.ஆர். குறியீடு பயண சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் இன்று முதல் நீட்டித்து தரப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் (Corona Restrictions) பின்பற்றி மெட்ரோ ரயில்களில் பயணிக்குமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்து இடங்களிலும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் அனைத்து வித கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பயணிகள் எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

பயணிகள் முகக்கவசம் அணியாமல் அல்லது முகக்கவசத்தை சரியாக அணியாமல், மெட்ரோ ரயில் நிலையங்கள் அல்லது மெட்ரோ ரயில்ளில் காணப்பட்டால், உடனடியாக 200 ரூபாய் அபராதம் விதைக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. 

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் அனைவரும் முகக்கசவசத்தை சரியாக அணிந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழு, மெட்ரோ ரயில் இயக்கம் மீண்டும் துவங்கிய 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 19 பயணிகளிடம் இருந்து அபராதமாக 3,800 ரூபாயை வசூலித்துள்ளது. 

ALSO READ: சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய 80 பேர் மீது வழக்குப்பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News