ஈரோட்டில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட அலுவலருக்கான ஆய்வுக் கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, "செப்டம்பர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும் குயின்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது என தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனூண்ணி தலைமையில் நடைபெற்ற உணவு பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோக திட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி இத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிர்வாக இயக்குனர் பிரபாகர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக 289 பயனாளிகளுக்கு 2.18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகள் மற்றும் 10 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது விவசாயிகளிடம் வாங்கும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்ப முன்னுரிமை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்த வகையில் 8 ஆயிரத்து 201 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக ரேஷன் கடைகளில் தரமற்ற அரசி விநியோகம் - அதிர்ச்சி தகவல்
செப்டம்பர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும் குயின்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் 15 மாதங்களில் 12 லட்சத்து 54 ஆயிரத்து 209 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை பாக்கெட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கும்பகோணத்தில் 92500 கிலோ அரிசி தான் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த அரிசியை வழங்கிய 2 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அரிசியை வெளி மார்கெட்டில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செயல்படாத போது பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்காத கடை ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
மேலும் படிக்க: உயர்ந்தது பால் விலை! ஆவின் புதிய விலை உயர்வு பட்டியல் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ