மேலும் ஒரு நாள்.... பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு

ஜனவரி 3 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

Written by - ZEE Bureau | Last Updated : Dec 30, 2019, 07:56 PM IST
மேலும் ஒரு நாள்.... பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு

சென்னை: ஜனவரி 3 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த 29 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால், முழு தேர்தல் முடிவு வெளியாக அடுத்து நாளும் ஆகலாம் என்பதால், ஜனவரி 3 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை கூறியது, "உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடந்துள்ளதால், வாக்கு எண்ணிக்கை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. பல பள்ளிகளில் வாக்கு எண்ணும் மையம் அமைத்திருப்பதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3 ஆம் தேதிக்கு பதிலாக அடுத்த நாள் (ஜனவரி 4) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலில் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், அதன் பிறகு 3 ஆம் தேதி திறக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில், தற்போது ஜனவரி 4 ஆம் தேதி (சனிக்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 4 சனிக்கிழமை என்பதால் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ - மாணவிகள் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்த நாளும் (ஜனவரி 5) விடுமுறை நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல்கட்டத் தேர்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப் பதிவு கடந்த 27 ஆம் தேதி முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து இன்று 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பவில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 46,639 பதவிகளுக்கு நடந்து முடந்தது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

More Stories

Trending News