தமிழகம் முழுவதும் குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக குட்கா, பான் போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் நோக்கத்தில் போலீஸார் பெட்டி கடைகள் தொடங்கி அனைத்து இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அது மட்டும் இன்றி இதற்கென பிரத்தியேகமாக குழுக்கள் அமைக்கப்பட்டும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி அருணாசலபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அது மட்டுமின்றி சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா மற்றும் புகையிலை கொண்ட 24 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அதனை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், விக்னேஸ்வரன் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற போதை வஸ்துக்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | மனைவியை கொன்று கணவன் தற்கொலை; சடலங்களுடன் வீட்டில் தவித்த மகள்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR