லீனாவை அரெஸ்ட் பண்ணுங்க... காளிக்கு எதிராக களமிறங்கிய ஹெச்.ராஜா

லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டுமென்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 5, 2022, 12:08 PM IST
  • லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார்
  • படத்தின் போஸ்டரை பார்த்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்
லீனாவை அரெஸ்ட் பண்ணுங்க... காளிக்கு எதிராக களமிறங்கிய ஹெச்.ராஜா title=

கவிஞராகவும், ஆவணப்பட இயக்குநராகவும் அறியப்படுபவர் லீனா மணிமேகலை. இவரது பறை, தேவதைகள் உள்ளிட்ட ஆவணப்படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றவை. 

இவரது ஆவணப்படங்களுக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளன.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

Leena Manimekalai

லீனா மணிமேகலை தற்போது காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்தப் போஸ்டரில் காளி கெட்டப்பில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட்டுடனும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியுடன் இருக்கிறார். தற்போது இந்தப் போஸ்டரைக் கண்ட சில இந்து கடவுளை லீனா அவமதித்துவிட்டார் என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

 

இந்தச் சர்ச்சை குறித்து விளக்கமளித்த லீனா மணிமேகலை, ,“ஒரு மாலைப்பொழுதில் டொரோண்ட்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். படத்தைப் பார்த்த பிறகு "arrest leena manimekalai" ஹேஷ்டேக் போடாமல் "love you leena manimekalai" என்ற ஹேஷ்டேக்தான் போடுவார்கள். 

மேலும் படிக்க | இழப்பதற்கு இனி எதுவும் இல்லை - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை அதிரடி

எனக்கு இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. இருக்கும்வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் அதையும் தரலாம்” என விளக்கமளித்திருந்தார்.

 

இந்நிலையில் காளி பட போஸ்டருக்கு ஹெச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், #ArrestLeenaManimekalai for scandalising MaaKaali என பதிவிட்டிருக்கிறார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News