ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமா... உங்களுக்காகவே அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட்

Ooty Rose Garden Show Date Extended: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்ற ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 19, 2024, 09:39 PM IST
  • உதகையில் வருடம் தோறும் ரோஜா கண்காட்சி நடக்கும்.
  • இந்த முறை 19வது ரோஜா கண்காட்சி நடைபெற்றது.
  • எப்போதும் 10 நாள்கள் மட்டுமே இந்த கண்காட்சி நடைபெறும்.
ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமா... உங்களுக்காகவே அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட்   title=

Ooty Rose Garden Show Date Extended: தமிழ்நாட்டில் இது கோடை சீசன் என்று சொன்னால் தற்போது யாரும் நம்ப மாட்டார்கள் எனலாம். கத்திரி வெயில் கடுமையாக தாக்கி வந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்கிறது எனலாம். கடந்த சில நாள் முன் பழைய குற்றலா அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறுவன் ஒருவன் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த துயர சம்பவமும் நடந்தேறியது. 

மே மாதத்தில் தமிழகம் முழுக்க இவ்வளவு மழை பெய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடலில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தாலும், தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே மாதம் 22ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் தொடங்குவதும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்கில் தொடங்குவதும் இயல்புதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

இருப்பினும், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்கூட்டியே இன்றைய தினமே (மே 19) தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மே 31ஆம் தேதியெ தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் குளிக்க தடை... காரணம் இது தான்..!!

தற்போது கோடை மழை தமிழகம் முழுவதும் பெய்து வருவது சுற்றுலா பயணிகளை மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது எனலாம். வெயிலின் கொடுமை, விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு என பிரச்னைகள் இருந்தாலும் ஓராண்டு காலம் திட்டமிட்டு வந்த சுற்றுலாவை எதிர்பாராத மழை கெடுத்துவிடுவதாக பயணிகள் தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். 

அந்த வகையில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளது. வழக்கமாக உதகையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்றாலும் இந்தாண்டு சற்று அதிகரித்துள்ளது எனலாம். அந்த வகையில், உதகை அரசு ரோஜா பூங்காவில் 10 நாட்களாக நடைபெற்று வந்த ரோஜா கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் இன்று நிறைவடைந்தாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மேலும் மூன்று நாட்களுக்கு கண்காட்சியை நீட்டிப்பதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

உதகை 19வது ரோஜா கண்காட்சி

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழும் விதமாக  ஆண்டுதோறும் உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான 19ஆவது ரோஜா கண்காட்சி கடந்த மே 10ஆம் தொடங்கியது. 

ரோஜா கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 1 லட்சம் ரோஜா மலர்களைக் கொண்டு வன உயிரினங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "SAVE WILD LIFE" என்ற வாசகத்தோடு யானை, காட்டு எருமை, மான், நீலகிரி வரையாடு, புலி, பாண்டா கரடி, ஆந்தை, புறா போன்ற வடிவங்கள் மலர்களால் வடிவமைக்கபட்டது.

அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த ரோஜா கண்காட்சி 10 நாட்கள் நடைபெற்ற நிலையில் நிறைவு நாளான இன்று தனியார் மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் ரோஜா பூங்காக்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் மு.அருணா நினைவு கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 29 முதல் பரிசுகள், 25 இரண்டாம் பரிசுகள், 12 சுழற்கோப்பைகள், 14 சிறப்பு பரிசுகள் உட்பட 80 பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. 10 நாட்கள் வெற்றிகரமாக ரோஜா கண்காட்சியை நடத்திய மகிழ்ச்சியில் பூங்க ஊழியர்கள் உற்சாகமாக படுகு மொழி பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் ரோஜா கண்காட்சியினை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை வீடியோ வைரல்... தாய் தற்கொலை - காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News