தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தபோது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 68-50 அடியாக உயர்ந்தபோது இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து 13145 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 3169 கனஅடி வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு விநாடிக்கு 5579 மில்லியன் கன அடியாக உள்ளது. மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களில் வைகை ஆற்றுக்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அணையின் முழு கொள்ளளவான 71 அடி உயர்ந்தவுடன் அணை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும்.
தூத்துக்குடி பகுதியில் பெய்துள்ள கனமழையை பார்வையிட்ட கனிமொழி, "200-ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபடியான மழைதான் பெய்துள்ளது பெரிய பாதிப்புதான். மாநகராட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்ட சுமார் 7-ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட இடங்களில் மக்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க முதல்வரின் உத்தரவின் பேரில் ஹெலிகாப்டர் மூலம் உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை வரை தென்காசி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (19.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் சிக்கி தவித்து வருகின்றன. இவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன், பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ