கனமழை எதிரொலி! தமிழகத்தில் 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 2, 2018, 08:50 AM IST
கனமழை எதிரொலி! தமிழகத்தில் 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தமிழகத்தில் துவங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் கும்பகோணத்திலும் தொடர் கனமழை காரணமாக தனியார் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

More Stories

Trending News