தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை; 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்யும் நிலையில் நாளை முதல் மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Last Updated : Aug 10, 2019, 12:56 PM IST
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை; 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! title=

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்யும் நிலையில் நாளை முதல் மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த ஒருவார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் தமிழகம், கேராளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு உருவானால் 13ஆம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கேரளா மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக உள்ளதாகக் கூறினார்.

தென்மேற்கு பருவக்காற்று குளிர்ந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மோதி வீசக் கூடிய நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் 2 நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

 

Trending News