Weather Update: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Last Updated : Oct 1, 2020, 01:32 PM IST
Weather Update: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! title=

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ALSO READ | வீடு, கார் கடன்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்கும் 2 வங்கிகள்..!

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூடடத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், வடபுதுப்பட்டு, வேப்பூர் தலா 13 செ.மீ மழையும், காட்டுமயிலூர் 12 செ.மீ மழையும், கலசப்பாக்கம் தலா 9 செ.மீ மழையும், காவேரிப்பாக்கம், கோபிசெட்டிபாளையம், ஆம்பூர், சேத்துப்பட்டு தலா 8 செ.மீ மழையும், வாணியம்பாடி, மைலம்பட்டி, சீகூர், வெம்பாக்கம் தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Trending News