வெளிநாட்டிலிருந்து புதிய சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
வரி ஏய்ப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி நடராஜன் உட்பட 4பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெளிநாட்டிலிருந்து புதிய சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ.1.62 கோடி இழப்பு ஏற்ப்பட்டது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிபிஐ முதன்மை நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட நடராஜன், வி.எம் பாஸ்கரன், தொழிலதிபர் யொகேஷ் பலகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளர் கஜரிதா ஆகிய நன்கு பேருக்கும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி இவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையையும் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.