ஐஐடி மெட்ராஸ் ஐஐடி சென்னை என பெயர் மாற்றமா? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

மத்திய கல்வி அமைச்சர் இன்று மக்களவையில், "இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைத் திருத்துவதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை" என்று அவர் கூறினார். 

Written by - ZEE Bureau | Last Updated : Jul 26, 2021, 09:00 PM IST
  • ஐ.ஐ.டி மெட்ராஸின் பெயரை ஐ.ஐ.டி சென்னை என மாற்ற எந்த திட்டமும் இல்லை
  • மக்களவையின் கல்வி அமைச்சரால் இந்த அறிக்கை வழங்கப்பட்டது.
  • 1996 ல் தமிழக அரசு மெட்ராஸ் பெயரை சென்னை என மறுபெயரிட்டது.
ஐஐடி மெட்ராஸ் ஐஐடி சென்னை என பெயர் மாற்றமா? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

புது டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் இன்று மக்களவையில், "இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைத் திருத்துவதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை" என்று அவர் கூறினார். 

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Education Minister Dharmendra Pradhan), இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐ.ஐ.டி மெட்ராஸின் ( IIT Madras) பெயரை ஐ.ஐ.டி சென்னை என மாற்ற எந்த திட்டமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் அவர் இதை தெரிவித்தார். 

மத்திய கல்வி அமைச்சர் மக்களவையில் (Lok Sabha) எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்தார். "இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைத் திருத்துவதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை" என்று அவர் கூறினார். 1996 இல் தமிழக அரசு (Tamil Nadu government), மெட்ராஸ் என இருந்ததை "சென்னை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி என்னவென்றால், ஐ.ஐ.டி மெட்ராஸை ஐ.ஐ.டி சென்னை என மறுபெயரிடுவதற்கான ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்தோ அல்லது எந்தவொரு அமைப்பினரிடமிருந்தோ ஏதேனும் கோரிக்கை இந்திய அரசுக்கு வந்ததா? பெயர் மாற்றம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன? எனக் கேள்வி எழுப்பட்டது. 

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐ.ஐ.டி மெட்ராஸ் 1959 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவை மத்திய அறிவியல் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் மேற்கொண்டார். இந்த நிறுவனம் பதினாறு துறைகளை சேர்ந்த பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் "சிறந்த கல்வி நிறுவனம்" (Best Educational Institution) என்றும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி பம்பாய் 1958 இல் நிறுவப்பட்டது, தற்போது மும்பை நகரில் அமைந்துள்ளது, ஆனால் முன்பு அது பம்பாய். இருப்பினும், ஐ.ஐ.டி பம்பாய் (IIT Bombay) ஐ.ஐ.டி மெட்ராஸைப் போன்ற அதே பெயரில் தான் உள்ளது எனக்கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News