School College Reopen: நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு - இவைகள் மிக கட்டாயம்!

Tamil Nadu School Reopen Guidelines: தமிழக பொது சுகாதாரத் துறை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2022, 06:04 PM IST
School College Reopen: நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு - இவைகள் மிக கட்டாயம்! title=

சென்னை: 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக பொது சுகாதாரத் துறை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

- பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

- பள்ளிக்கு வருகை தரும் 15 முதல் 18 வயதுள்ள மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம்.

- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், பணியாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். 

- பள்ளி மற்றும் கல்லூரி வருகை தரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும். 

- அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

- பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கை கழுவுவதற்கு கிருமி நாசினி (Sanitizer) வைத்திருக்க வேண்டும்.

- வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது.

- பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவதை  தடுக்க வேண்டும்

- அனைத்து இடங்களிலும் மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

- காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரொனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

ALSO READ | பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முக்கிய அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News