பாஜகவில் சேரும் முக்கிய பிரமுகர்கள்... சீக்ரெட் சொல்லும் அண்ணாமலை!

TN BJP President Annamalai: கோவையில் நாளை மாலை 5 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் கட்சியில் சேர உள்ளார்கள் என்றும் நாளைய நிகழ்வை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அண்ணாமலை பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2024, 09:16 PM IST
  • ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அண்ணாமலை
  • தெர்மாகோல் விஞ்ஞானிகள் எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள் - அண்ணாமலை
  • இந்தியா கூட்டணி உடைந்து போன ஒரு பொம்மை - அண்ணாமலை
பாஜகவில் சேரும் முக்கிய பிரமுகர்கள்... சீக்ரெட் சொல்லும் அண்ணாமலை!

TN BJP President Annamalai: தென்னிந்திய பார்வர்டு பிளாக் சார்பாக தேச ஒற்றுமை தென்மண்டல மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து, விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். 

Add Zee News as a Preferred Source

அப்போது அவர் கூறுகையில், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா புழக்கம் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக சிந்தட்டிக் ட்ரக்ஸ் அதிகமாகிவிட்டது. டெல்லியில் 2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் பிடிப்பட்டபோது, அதன் தலைவராக, திமுக அமைப்பாளர் ஜாபர் சாதிக் முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவரது சகோதரர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியாக உள்ளார். 

இவரும் அந்த வழக்கில் ஒரு குற்றவாளி. இதில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தமிழக டிஜிபி இவருக்கு கேடயம் வழங்கி கௌரவித்துள்ளார். இன்றைக்கு அவசர அவசரமாக அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். ஒரு புறம் போதை பொருள் அதிகரித்திருப்பது, மற்றொருபுறம் 2000 கோடி கஞ்சா மாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அதன் பின்னர் இது தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். 

மேலும் படிக்க | போதைப்பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் - துரைமுருகன் அதிரடி!

பாஜகவில் சேரும் முக்கிய பிரமுகர்கள்

யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி பல்லடத்திற்கு வருகிறார். அனைவரும் ஆவலாக உள்ளோம். அதை தொடர்ந்து சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்" என்றார். மேலும், யாத்திரை குறித்த கேள்விக்கு, "நீங்கள் தான் சொல்ல வேண்டும். இது 2024 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் மாற்றத்திற்கு அச்சாணியாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை" என்றார். 

மேலும், விஜயதாரணியை தொடர்ந்து மற்ற கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் சேர்வார்களா என்ற கேள்விக்கு,"நாளை மாலை 5 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் கட்சியில் சேர உள்ளார்கள்" என்றார். அதிமுகவில் பாஜகவினர் சேர்கிறார்கள் என இபிஎஸ் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, "தொண்டர்களை கஷ்டப்பட்டு இழுக்கிறார்கள். நாங்கள் முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களை இழுக்கிறோம். அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான் என செல்லூர் ராஜூவிடம் சொல்லுங்கள். அதை குறைப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்க சொல்லுங்கள்" என்றார். 

அவர்களின் பாஷையில்தான் பதிலடி

மோடியா, எடப்பாடியா என பிரச்சாரம் மேற்கொள்வோம் என அதிமுகவினர் கூறியது குறித்த கேள்விக்கு, "நான் சிரித்து விட்டேன் என்று சொல்லுங்கள்" என்றார். தொகுதி பங்கீடு திமுக முடித்தது குறித்த கேள்விக்கு, "இன்று தொகுதி பங்கீடு முடிந்தால், நாளை தேர்தல் நடைபெற்று விடுமா. போட்டியில் இறுதியில் வெற்றி பெறுவது தான் முக்கியம். திமுக வார்ம் அப் செய்கிறார்கள், ஆனால் வெற்றி பெறுபவர்கள் அல்ல.
நோட்டுப்பட்டி, ஒட்டி பெட்டி என இரண்டுடனும் அவர் (சீமான்) சுற்றுவதைப்போல் தெரிகிறது. அவரிடம் தான் தெளிவாக கேட்க வேண்டும்.

மேலும் படிக்க | கன்னியாகுமரி எம்.பி. சீட் யாருக்கு? விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் களேபரம்!

சில மனிதர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் போது பாஷையும் அதிகமாக தான் இருக்கும். மத்திய அமைச்சர் வார்த்தையில் எந்த தவறும் கிடையாது. தெர்மாகோல் விஞ்ஞானிகள் எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள். நாங்கள் தமிழக மக்களை பார்த்து பேசவில்லை, இதற்கு முன் இப்படி பேசியதில்லை பேச வேண்டிய கட்டாயம். மோசமான அரசியல் வாதிகளுக்கு அவர்களுடைய பாஷையில் திருப்பிக் கொடுத்தால் தான் இந்த அரசியல் சாக்கடை மாறும் என்பதற்கு நானும் வந்துவிட்டேன். அவர்கள் பேசும் வார்த்தையில் தான் என்னுடைய பதிலும் இருக்கும்" என்றார். 

விஜய் கட்சி குறித்து...

விஜய் கட்சி துவங்கி இரண்டு கோடி தொண்டர்கள் சேர்ப்பது குறித்த கேள்விக்கு, "ஓட்டுநர் இருக்கையில் டிரைவர் அமர்ந்திருக்கும் போது அருகில் இருப்பவர் ஓட்ட சொல்லித் தரலாமா. அவர் வண்டியை அவர் ஓட்டுகிறார், என் வண்டியை நான் ஓட்டுகிறேன்" என்றார் 

இனி திமுக...

மேலும் அவர்,"பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. 2026ஆம் ஆண்டிற்கான மாற்றம் 2024இல் நடக்கும். தமிழகத்தில் ஒரே தேர்தல் நடக்கும். திமுக தனக்கான தன்மையை இழந்து விடும். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் சும்மா ஆட்சியில் தான் இருப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் 45 நாட்கள் உள்ளது. அரசியல் களம் தீ பிடிக்கத் துவங்கியுள்ளது. இன்றைக்கு டிவி சேனல்கள் தான் நாடகமாக உள்ளது. 

அடிப்படையில் நாங்கள் கொள்கை அடிப்படையில் செயல்படுகிறோம், நிச்சயமாக 45 நாட்களில் சூறாவளியாக இருக்கும். பாஜக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்த அனைத்து உழைப்பையும் போட்டு உள்ளோம். நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் நடைபெறும் நிகழ்வைப் பாருங்கள். இந்தியா கூட்டணி உடைந்து போன ஒரு பொம்மை" என முடித்தார். 

மேலும் படிக்க | மத்திய நிதி அமைச்சரை ஜாதி ரீதியாக இழிவுப்படுத்தும் திமுக - வானதி ஸ்ரீனிவாசன் அட்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News