தாயை கருணைக் கொலை செய்த மகன்… ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ஸ்ரீபெரும்புதூரில், படுத்த படுக்கையாக இருந்த தாயை மகன் கருணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 29, 2020, 10:18 AM IST
  • தாயை மகன் கருணை கொலை செய்த சமபவம் ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • அனந்தன் என்பவரது குடிப்பழக்கத்தினால், அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
  • செங்கல்பட்டில் இருந்த கோந்தம்மாளின் மகள் தனது தாயை காண வந்திருந்தார்.
தாயை கருணைக் கொலை செய்த மகன்… ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் வசிக்கு 36 வயது நபர், தனது தாய் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், அவரை கருணை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது இல்லத்தை தனது தாயை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.

அவரது தாயான கோவிந்தம்மாள் என்பவர் தனது கணவர் துரை மற்றும் அவரது மகன் அனந்தன் உடன் வசித்து வந்தார்.

சலவை தொழில் செய்து வரும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தனர்.

அனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது அவரது மனைவி தனது குழந்தைகளுடன் அவரை விட்டு விலகி வசித்து வருகிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தாயார் கோவிந்தம்மாளுக்கு காச நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயும் இருந்தது. ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூலை மாதம் முதல் வாரத்தில் வீடு திரும்பினார்.

அந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல் நிலை மோசமடைந்தது, ஆனால், தனது இறுதி நாளை வீட்டிலேயே கழிக்க வேண்டும் எனக் கூறி அவர், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டார்.

ஞாயிறன்று, அவரது உடல் மோசமானதை தொடர்ந்து, செங்கல்பட்டில் வசிக்கும் அவரது மகள் கோவிந்தம்மாளை காண வந்திருந்தார்.

ALSO READ | கூரான கத்தியை விழுங்கிய நபர்… சவாலான அறுவை சிகிச்சை செய்த AIIMS மருத்துவர்கள்

திங்களன்று மாலை, தந்தை துரை அவர்கள், வேலை முடிந்து வீடு திரும்புகையில், அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். சம்பவம் நடக்கும் போது, கோவிந்தம்மாளின் மகள், பக்கத்து வீட்டில் இருந்தார்.

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் உள்ளதால், வேலை இல்லாமல் அக்குடும்பம் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது.

ALSO READ | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!!!!

மாலை சுமார் நாலரை மணிக்கு வீடு திரும்பிய அனந்தன், தனது தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அனந்தன் மீது கொலை வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் அவரது கைது செய்துள்ளனர்

More Stories

Trending News