ஆண்டுகள் போயினும், ஆட்சிகள் மாறினும் காட்சிகளும் கொள்கைகளும் மாறினும், “ஜெயலலிதா மட்டும் இப்போது இருந்திருந்தால்?” என்ற வார்த்தைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவர் கொண்டு வந்த எண்ணற்ற மகளிர் மற்றும் சமூக நலத் திட்டங்கள் காலமெல்லாம் அவர் நினைவைப் போற்றும்.
பிறக்கும் போது பெரிய புகழ் எதுவும் இல்லை, ஆனால் மறைந்த பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இப்படிப்பட்ட ஆளுமை இருந்திருந்தால், என்று அனைவரையும் நினக்கும் அளவுக்கு தனது திறமையால் உயர்ந்தவர் ஜெயலலிதா.
நல்லாட்சி கொடுத்தாரா, இல்லை ஊழல் ஆட்சி புரிந்தாரா? என்ற விவாதத்தங்களையும் மீறி, தனது ஆளுமையையும் திறமையையும் நிலைநிறுத்தி, இதுபோன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் இல்லை என்று சொல்ல வைத்த பெருமையை, சரித்திரத்தில் பதியச் செய்த ‘புரட்சித் தலைவி’ செல்வி ஜெயலலிதா அவர்கள்.
மிகப் பெரிய ஆளுமைக்கு பிறகு சிறந்த தலைவர்கள் பொறுப்பேற்றிருந்தாலே, அவர்களின் திறமை விமர்சிக்கப்படும் என்ற நிலையில், ஜெயலலிதாவின் வெற்றிடத்தை இன்றைய அதிமுக தினம் தினம் சந்தித்து வருகிறது. ஒரு ஆளுமை இல்லாவிட்டால் எந்த அளவிற்கு ஒரு கட்சியில் குழப்பங்கள் ஏற்படும் என்பதற்கு தற்போது அதிமுகவின் நிலைமையை உதாரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் தான், யாரும் ஒப்பிட முடியாத மாபெரும் ஆளுமை என்பதை மரணத்திற்கு பிறகும் நிரூபித்துக் கொண்டிருப்பது அவர் தனது வாழ்நாளில் செய்த மிகப் பெரிய சாதனை என்பதை செல்வி ஜெயலலிதாவை விமர்சிப்பவர்களும் ஒப்புக் கொள்ளும் விஷயம் என்பதே தமிழகத்தின் ‘அம்மா’ என்ற மாபெரும் ஆளுமையின் சாதனை.
தொலைநோக்கு, துணிச்சலான மற்றும் சமரசமற்ற போராட்டக்காரர், தைரியம், நம்பிக்கை, அவரது நேர்த்தியும் கொண்ட உறுதியான பெண் என அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண் அரசியல்வாதிகளில் செல்வி ஜெயலலிதாவுக்கு என்றென்றும் ஒரு தனியிடம் உண்டு.
தங்கத் தாரகையின் 75 வது பிறந்தநாள் என்பது புரட்சித்தலைவியின் பவள விழாவில் பலரும் அஞ்சலிகளையும் நினைவலைகளையும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். அதில், தமிழகத்தின் மற்றுமொரு பெண் தலைவரும், தற்போது ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ள திருமதி தமிழிசை சவுந்தர்ராஜனின் அஞ்சலியை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
‘பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்’.
மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் அளவு சாதனைகளை நிகழ்த்தி, தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு என்றால் அதில் ஜெயலலிதாவுக்கு முதலிடம் தான்....
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ