Jayakumar Condemns Annamalai: முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் அக்காட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, செங்கோட்டையன், பொன்னையன், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா வழியில் அதிமுக
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிர செய்தவர் அண்ணா. இயல், இசை, நாடக தமிழில் பன்மொழி தன்மை பெற்றவர். ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். தமிழரின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியவர்.
உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க கூடிய வகையில் பேச்சு ஆற்றல் எழுத்து ஆற்றல் கொண்டவர், அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர். அண்ணா வழியில் கட்சி வெற்றி நடை போடுகிறது" என்றார்.
மேலும் படிக்க | குடும்பங்களின் வளர்ச்சியில் பெண்களுக்கான உரிமைத் தொகை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா ஆகியோரின் நேற்றைய சந்திப்பு குறித்த கேள்விக்கு,"நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கூட்டணி கட்சி சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான். எங்கள் கூட்டணி பாஜக உள்ளது, அதனால் கூட்டணி கட்சி தலைவரை பார்த்தார். உங்கள் கற்பனையை எல்லாம் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டாம். தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். அமலாக்கத்துறை சோதனை தகவல் அடிப்படையில் செய்கிறார்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள்" என ஜெயக்குமார் பதிலளித்தார்.
அண்ணாமலைக்கு கண்டனம்
அண்ணாவை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதை குறித்து செய்தியாளர் எழுப்பை கேள்விக்கு, "அதிமுக தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் இருக்கின்றனர். அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும்.
முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள். முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நன் மதிப்பு கொண்டுள்ளது. அண்ணா பற்றி பேசியதற்கு அதிமுக கண்டம் தெரிவிக்கிறோம். அண்ணாமலை, அண்ணா குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். நடக்காத விசியத்தை சொல்லி அண்ணா பெயரை கலங்கப்படுத்தக் கூடாது" என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை...
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு,"டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை, அமைச்சர் 14 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களை பார்த்தார் என்று செய்தி வருகிறது. எது தேவையோ அது செய்ய வேண்டும். மின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் எல்லாம் ஏற்றி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோள பொறியாக ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கின்றனர்" என ஜெயக்குமார் விமர்சித்தார்.
ஸ்டாலின் கூறியது பற்றி...
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறியுள்ளதை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு," கல்விக் கடன் ரத்து என்று சொன்னார்கள் செய்யவில்லை, நகை கடன் முழு தள்ளுபடி என்று சொல்லி 10 சதவீதம் தான் செய்தார்கள். தேர்தல் வாக்குறிதியை முழுமையாக நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை அல்ல ஒரு பாராங்கல்லையே சோற்றில் மறைக்கக் கூடிய வல்லமை படைத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சி" என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை: உங்கள் விண்ணப்பம் ரிஜெக்ட் ஆனதா? எப்படி தெரிந்துகொள்வது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ