"பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகன் ஆவர். ஆகையால், இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் ; பணியாற்ற காத்திருக்கிருக்கிறேன்" என்றார், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. இன்று அவருக்கு 54வது நினைவுநாள். இந்நன்னாளில் அவரது நினைவுகளைப் போற்றுவோம்.
அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அதிமுகவிலிருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள் என பழனிசாமிக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் எழுதியிருக்கிறார்.
1969 பிப்ரவரி 3-ஆம் தேதி அவர் இறந்தபோது சென்னையே மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது. 1.5 கோடி மக்கள் சென்னைக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தகவல் இருக்கிறது. அவர் அண்ணா.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!
இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட 15 தேர்தல்களில் 13 தேர்தல்களில் பங்கேற்றவர் கலைஞர் கருணாநிதி. இந்த 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே மக்களின் தீர்ப்பாய் பெற்ற தலைவர் கருணாநிதி.