ஜெயலலிதா நினைவு மண்டபம் மார்ச் மாதம் திறப்பு: TN Govt.

ஜெயலலிதாவின் நினைவிடம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்க இருப்பதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது!

Last Updated : Dec 20, 2018, 12:53 PM IST
ஜெயலலிதா நினைவு மண்டபம் மார்ச் மாதம் திறப்பு: TN Govt. title=

ஜெயலலிதாவின் நினைவிடம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்க இருப்பதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது!

மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள MGR. நினைவிட வளாகத்தில் நல்அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் தெரிவித்திருந்தது. 

ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்காக சுமார் ரூ.50.80 கோடியில் அளவில்  டெண்டா் விடப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபம் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, நினைவிடத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜெயலலிதா நினைவிடம் கட்டுவது, அரசு தன்அதிகார வரம்புக்கு உட்பட்டது தான் முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார். மேலும், மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே  நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், மார்ச் மாதத்தில்  பணிகள் முடிக்கப்பட்டு, திறக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல்  தள்ளி வைத்தனர். 

 

Trending News