AsianGames-ல் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு...!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு...! 

Last Updated : Aug 27, 2018, 02:56 PM IST
AsianGames-ல் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு...! title=

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு...! 

தொடர்ந்து 9-ஆவது நாளாக 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் ஸ்குவாஷ் மகளீர் ஒன்றையை பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்குவதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

 

Trending News