'மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் வந்துவிடும்...' கனிமொழி கூறுவது என்ன?

TN Latest News: பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2024, 09:56 PM IST
  • ஜிஎஸ்டி வரிப்பாக்கி என்பது 20 ஆயிரம் கோடி உள்ளது - கனிமொழி
  • இது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய தேர்தல் - கனிமொழி
  • மணிப்பூரில் இரண்டு குழுக்கள் கிடையே சண்டை - கனிமொழி
'மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் வந்துவிடும்...' கனிமொழி கூறுவது என்ன?

TN Latest News: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மகளிரணி - மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். 

Add Zee News as a Preferred Source

இதனை தொடர்ந்து மகளிரணி நிர்வாகிகள், மகளிரணியினருக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
நிர்வாகிகளுக்கு திமுக கட்சி வண்ணம் கொண்ட சேலைகளை வழங்கிய பின்னர், கனிமொழி பேசுகையில், "வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும், மிகவும் முக்கியமான தேர்தல். 

மிகவும் பாடுபட்டு தான் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற்றுள்ளோம். ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும்தான் மருத்துவராக முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றியது திராவிட இயக்கம். டெல்லியில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கஷ்டப்பட்டு போராடி பெற்ற உரிமைகளை தற்போது பறிக்கின்றனர்.

மேலும் படிக்க | போதைப்பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் - துரைமுருகன் அதிரடி!

மருத்துவத்துறையில் யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று கூறி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது திமுக. ஏழை, எளிய மக்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவ கல்லூரி இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில் தான் என்றாக்கியது. 

இதையெல்லாம் ஒழிக்க கூடிய வகையில்தான் நீட் கொண்டு வந்துள்ளனர். நமக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் நமது குழந்தைகள் படிக்க முடியாத நிலையை கொண்டு வந்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையில் அடுத்த நிலைக்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அது அவ்வாறு கொண்டு சொல்லவில்லை, ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை சட்டத்தில் அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற நிலையை உருவாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தால் நமது பிள்ளைகள் எந்த கல்லூரிக்கும் போக முடியாத நிலை ஏற்படும். வரும் தேர்தல் என்பது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய தேர்தல். நம்முடைய அடுத்த தலைமுறை வாழ்க்கை கெட்டுப் போகாமல் இருக்க, அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது யார் ஜெயிக்கிறார்? யார் தோல்வி பெறுகிறார் என்பது கிடையாது.

நம் குழந்தையின் எதிர்காலம் மற்றும் நாம் அமைதியாக வாழ்வதை முடிவு செய்யக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத ரீதியானது, கோயிலுக்குப் போவது வழிபடுவது, போகாமல் இருப்பது அது ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கு உட்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற நிலைமை கிடையாது. இங்கு அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்கிறோம். 

மேலும் படிக்க | மத்திய நிதி அமைச்சரை ஜாதி ரீதியாக இழிவுப்படுத்தும் திமுக - வானதி ஸ்ரீனிவாசன் அட்டாக்

மதத்தினை வைத்து நமக்குள் சண்டையை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் அடைய வேண்டும் என்று நினைத்தால், பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். மணிப்பூரில் இரண்டு குழுக்கள் கிடையே சண்டை. இதுவரை பிரதமர் மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. அந்த மாநிலத்தில் இருக்கும் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கி அவதியுற்று வருகின்றனர். அங்கு குழந்தைகள், பெண்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறனர்.

இப்படி சண்டைய மூட்டி பிரச்சனைகளை உருவாக்கி அதில் குளிர்காய்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களால் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். இதெல்லாம் இன்று தமிழகத்தில் இல்லை. இங்கு எல்லோரும் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்கின்றனர். தமிழக அரசு மக்களை பாதுகாக்கிறது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மேலும் அந்த திட்டத்திற்கான நிதி உதவிகளை தொடர்ந்து குறைத்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களிலும் இதே நிலைதான் நடக்கிறது. மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரண வழங்கவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரிப்பாக்கி என்பது 20 ஆயிரம் கோடி உள்ளது.

பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும். மகளிர் உரிமைத் தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்கு  தொடர்ந்து தமிழகத்திற்கு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். 

வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டாலும் பணம் தருவதில்லை, வரவேண்டிய வரி நிலுவைத் தொகையும் தருவதில்லை, தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை. தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு இங்கு இருக்க கூடிய சகோதர சகோதரிகளுக்கு எதிராகவே இருக்கக்கூடிய ஆட்சி தான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எங்கே என்று கேளுங்கள்.

மழை, வெள்ளத்தினால் சென்னை, தூத்துக்குடி பாதிக்கப்பட்ட போது எங்கே போயிருந்தீர்கள் என்று கேளுங்கள். மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டிற்கு எங்கள் முதல்வர் 4 லட்ச ரூபாய் கொடுத்தார், நீங்கள் என்ன கொடுத்தீர்கள் என்று கேளுங்கள். நாம் எல்லாவற்றுக்கும் பொருத்துப் போவோம் என்று நினைக்கிறார்கள். இங்கு உள்ள பெண்கள் பொங்கி எழுந்தாலே அவர்களை ஓட ஓட வைக்க முடியும் என்பதை புரிய வைப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி என்பது இந்த நாட்டை பாதுகாக்க கூடிய வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | பாஜகவில் சேரும் முக்கிய பிரமுகர்கள்... சீக்ரெட் சொல்லும் அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News