கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்( 34 ) இவரது மனைவி கார்த்திகா( 21) இவர்களுக்கு ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளான்.
தாய் கார்த்திகா உடனடியாக கூலி வேலைக்கு சென்றிருந்த கணவர் ஜெகதீஷ்க்கு போன் செய்து விஷப்பொடியை சாப்பிட்டு சரண் மயக்கமடைந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பைக்கில் உலக உலா : அஜித்தின் திட்டம்
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமணையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசொதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | 30 அடி உயர மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்!
மேலும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தை விஷப்பொடியை சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது.
இதையடுத்து குடும்ப தகராறு காரணமாக குழந்தையின் தாய், தந்தையை போலீசார் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | ‘அன்புள்ள சத்குருவுக்கு.!’ - சோனியா காந்தி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR