ஜாமீனில் வெளிவரும் ப.சிதம்பரம் நாளை நாடாளுமன்றம் வருகை தர உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் புதன்கிழமை உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் நாளை நாடாளுமன்றம் வருவார் எனத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 4, 2019, 05:04 PM IST
ஜாமீனில் வெளிவரும் ப.சிதம்பரம் நாளை நாடாளுமன்றம் வருகை தர உள்ளார். title=

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா (INX Media case) வழக்கில் புதன்கிழமை உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram) நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வார் என அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

74 வயதான காங்கிரஸ் தலைவரின் மகன் கார்த்தி சிதம்பரம் (Karti Chidambaram), நாளை அமர்வில் தனது தந்தை கலந்துக்கொள்வார் என்று செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறை சென்ற ப.சிதம்பரம் மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்ததும், உடனடியாக தனது ட்வீட்டர் பக்கத்தில், கார்த்திக் சிதம்பரம், “அட. கடைசியாக 106 நாட்களுக்குப் பிறகு.” என பதிவிட்டிருந்தார்.

 

இன்று (புதன்கிழமை) காலை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதி ஆர் பானுமதியின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது, ஆனால் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று அவருக்கு உத்தரவிட்டது. மேலும் அவருக்கு 2 லட்சம் தனிநபர் பத்திரமும், அதே அளவு இரண்டு ஜாமீன்களும் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

எந்தவொரு பத்திரிகை நேர்காணல்களையும் அல்லது வழக்கைப் பற்றி எந்தவொரு அறிக்கையையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு உயர் நீதிமன்ற பெஞ்ச் அவருக்கு உத்தரவிட்டதுடன், சாட்சிகளை செல்வாக்கு செலுத்துவதற்கும் அல்லது சாட்சியங்களை கலைப்பதற்கும் எதிராகவும் எச்சரித்து உள்ளது.

இதனை அடுத்து, அவர் 105 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவர உள்ளார். இதனையடுத்து தான், நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாளை ப.சிதம்பரம் கலந்துக்கொள்வார் என அவரது மகன் கூறியுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News