Investment Tips: முதலீடு என்பது நமது வாழ்வின் மிக முக்கியமான ஒரு அங்கமாகும். ஆனால், முதலீட்டிற்கு எப்போதும் பெரிய தொகை தேவை என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. நீங்கள் ரூ.100, ரூ.250 மற்றும் ரூ.500 ஆகிய குறைந்தபட்ச தொகைகளிலும் முதலீடு செய்யத் தொடங்கலாம். குறைந்த மூதலீட்டிற்கான பல திட்டங்கள் உள்ளன.
PPF, SIP, SSY மற்றும் RD போன்றவை அப்படிப்பட்ட திட்டங்கள்தான். இந்தத் திட்டங்களில் மாதத்திற்கு வெறும் 500 ரூபாய் முதலீடு செய்தால், நல்ல தொகையைச் சேர்க்கலாம். இப்போதெல்லாம், பெரும்பாலான திட்டங்கள் கூட்டு வட்டியின் பலனை வழங்குகின்றன. இதன் காரணமாக, எவ்வளவு காலம் முதலீடு செய்யப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக உங்கள் பணம் வளரும். பிபிஎஃப், எஸ்ஐபி, எஸ்எஸ்ஒய் மற்றும் போஸ்ட் ஆபிஸ் ஆர்டி போன்ற திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Systematic Investment Plan: எஸ்ஐபி
SIP மூலம் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இருப்பினும், SIP சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்ற இறக்கங்களுடன் சந்தை ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் SIP மிகவும் நல்ல வருமானத்தை அளித்துள்ளது. கடந்த சில நாட்களில் SIP இன் பிரபலமும் வேகமாக அதிகரித்ததற்கு இதுவே காரணம். எஸ்ஐபியில் சராசரியாக 12 சதவீதம் வருமானம் கிடைக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், மக்கள் நீண்ட காலத்திற்கு SIP மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள். உங்கள் திறனுக்கு ஏற்றவாறு எப்போது வேண்டுமானாலும் SIP இல் முதலீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்கலாம். இது உங்கள் லாபத்தை மேலும் அதிகரிக்கும்.
12 சதவிகிதத்தில் கணக்கிட்டால், ஒருவர் SIP இல் மாதம் 500 ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 12 சதவிகித வட்டி விகிதத்தின்படி, முதிர்வுத் தொகையாக 2,52,288 ரூபாய் கிடைக்கும். மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை ரூ.4,99,574 ஆக இருக்கும்.
Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி
பாதுகாப்பான முதலீட்டை விரும்பினால், PPF அதாவது பொது வருங்கால வைப்பு நிதி உங்களுக்கு லாபகரமான தேர்வாக இருக்கும். இந்த அரசு திட்டத்தில் 500 ரூபாயில் கூட முதலீட்டைத் தொடங்கலாம். ஒவ்வொரு வருடமும் இதில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்வது அவசியமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் 7.1 சதவீத வட்டி விகிதத்தில் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு 6000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். பிபிஎஃப் கால்குலேட்டரின் படி, 15 ஆண்டுகளில் இதன் மூலம் ரூ.1,62,728 சேர்க்கப்படும். அதேசமயம், இந்த திட்டத்தை இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால், 20 ஆண்டுகளில் ரூ.2,66,332 சேர்க்கலாம்.
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி திட்டம்
பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக இந்தத் திட்டம் அரசால் நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்தில் 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்பட வேண்டும். SSY திட்டம் 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.90 ஆயிரமாக இருக்கும். 15 முதல் 21 ஆண்டுகளுக்கு இடையில் நீங்கள் எந்த முதலீடும் செய்ய மாட்டீர்கள். ஆனால் உங்கள் தொகையில் 8.2 சதவிகிதம் வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும். முதிர்ச்சியின் போது முதலீட்டாளர்கள் ரூ 2,77,103 பெறலாம்.
Post Office RD: தபால் அலுவலகம் RD
முதலீடு செய்ய, போஸ்ட் ஆபிஸ் ஆர்டி -யும் ஒரு சிறந்த வழியாக இருக்கும். அஞ்சல் அலுவலக RD 5 ஆண்டுகளுக்கானது. தற்போது அதற்கு 6.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 100 ரூபாயில் போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். ஆனால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 டெபாசிட் செய்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.30,000 ஆக இருக்கும். அதற்கு வட்டியாக ரூ.5,681 கிடைக்கும். முதிர்ச்சியின் போது முதலீட்டாளர்கள் மொத்தமாக ரூ.35,681 பெறுவார்கள்.
மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ