உங்கள் வீட்டு மின்சார மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி?

தமிழகத்தில், கொரோனா பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று சென்று மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 21, 2021, 09:07 AM IST
உங்கள் வீட்டு மின்சார மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி?  title=

இன்று தமிழகத்தில் கொரோனாவை விட அதிகம் பேசப்படுவது மின் கட்டணம் பற்றிய செய்தி தான். தமிழகத்தில், கொரோனா பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று சென்று மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, முன்னதாக 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, இந்த மே மாத்திற்கும் நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. இருப்பினும், முன்பை விட இப்போதைய பயன்பாடு குறைவாக இருந்தால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் கட்டணம்  செலுத்த வேண்டி வருமே என்ற பிரச்சனை எழுப்பட்டது. அதோடு, காலியாக உள்ள வீட்டிற்கும், மின்சாரம் பயன்படுத்தாமலேயே மின்சார பில் அனுப்பப்பட்டு குழப்ப நிலை ஏற்படும் என மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

எனவே இது போன்ற குழப்பங்களை தவிர்க்கும் விதமாக, பொதுமக்கள் தாங்களே சுயமாக மின்சார ரீடிங்கை பார்த்து, அந்த தகவல்களை  மின்சாரய வாரியத்திற்கு அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த மே மாதத்துக்கு மட்டும் மின்சார கட்டணம் செலுத்தலாம் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

உங்கள் மின் மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி:

1. உங்கள் மின்சார மீட்டர் ரீடிங் தெளிவாக தெரியும் படி புகைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும்.

2. எடுத்த புகைப்படத்தை, உங்கள் பகுதிக்கான மின்வாரிய உதவி பொறியாளருக்கு அனுப்ப வேண்டும்.

3. புகைப்படம் அனுப்ப வேண்டிய உங்கள் பகுதிக்கான மின்வாரிய உதவி பொறியாளர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களை ‘www.tangedco.gov.in’ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News