கூட்டணிதான் காங்கிரஸை பாதித்துவிட்டது... திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது காங்கிரஸ்?

தமிழ்நாட்டில் வைத்த கூட்டணிதான் காங்கிரஸ் வளர்ச்சியை பாதித்துவிட்டதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 23, 2022, 07:54 PM IST
  • விடுதலையானார் பேரறிவாளன்
  • பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
கூட்டணிதான் காங்கிரஸை பாதித்துவிட்டது... திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது காங்கிரஸ்? title=

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்யக்கோரி அவரது தாய் அற்புதம்மாள் பல காலம் சட்டப்போராட்டம் நடத்திவந்தார். தமிழ்நாடு அமைச்சரவையும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. 

ஆனால் அந்தத் தீர்மானத்தின் மீது பல மாதங்களாக ஆளுநர் பாராமுகத்துடன் இருந்தார். இதனால் பேரறிவாளின் விடுதலை தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

பேரறிவாளன் விடுதலைக்கு திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேலும், பேரறிவாளவ் விவகாரத்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துவிடுமோ என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது.

Perarivalan

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர். ஆனால் மக்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. 

மேலும் படிக்க | செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி அண்ணணை வெட்டி கொலை செய்த தம்பி

பேரறிவாளன் விடுதலையை எங்களால் ஏற்க இயலாது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. கொலை செய்த ஒருவரை நாம் விடுவிக்கலாமா?

Alagiri

ராஜீவ் கொலை கைதிகள் மேலும் 6 பேரை விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. 

பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரள்வது இயல்பானதுதான். அந்த வகையில் மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது.

Alagiri

எனது அனுபவத்தை பொறுத்தவரை ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கு செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும் என்பது இல்லை. அந்த செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் திறன் இருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 1991-ம் ஆண்டு எங்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்தது. ஆனால் அதை அ.தி.மு.க. அறுவடை செய்தது.

மேலும் படிக்க | சென்னையில் ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்

கூட்டணி என்பது கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரஸை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்துவிட்டன.

தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்திவிட்டது என்பதே உண்மை. கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியை குறைத்து பாதித்து விட்டது. காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை. ஒரு கூட்டணி வலுவாக இருந்தால் கட்சியையும் அது வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News