இசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் இசைத்துறையிலும், சினிமா துறையிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், ஆந்திர அரசு ஒரு அரசு பள்ளிக்கு அவர் பெயரை வைத்துள்ளது

Written by - ZEE Bureau | Last Updated : Nov 27, 2020, 04:03 PM IST
  • ஆந்திரா அரசு நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளிக்கு SPB-பெயரை வைத்தது ஆந்திரா அரசு.
  • ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்தார் சரண்.
  • முன்னதாக, சென்னையில் ஒரு டப்பிங் ஸ்டுடியோவுக்கு ‘SPB’ என்று பெயரிடப்பட்டது.
இசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு

நிலவைப் பார்த்தாலும், மலரைப் பார்த்தாலும், குழலைப் பார்த்தாலும், குழல் ஊதும் கண்ணனைப் பார்த்தாலும், அந்தி மழையைப் பார்த்தாலும், மலையோரம் வீசும் காற்றை சுவாசித்தாலும், எதிலும், எப்போதும் SPB-ன் நினைவு வருவதை தடுக்க முடியாது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் இசைத்துறையிலும், சினிமாத் துறையிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், ஆந்திரா அரசு (Andhra Government) நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளியை 'டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அரசு இசை மற்றும் நடன பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த வகையில் அந்த உன்னதமான பாடகரை கௌரவிக்க திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. SPB-யின் மகன் சரண் (SP Charan), ஆந்திர அரசு மற்றும் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டிக்கு (YS Jagan Mohan Reddy) நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, சென்னையில் ஒரு டப்பிங் ஸ்டுடியோவுக்கு ‘SPB’ என்று பெயரிடப்பட்டது. அதை நடிகர் ராதா ரவி திறந்து வைத்தார். டப்பிங் தொழிற்சங்க உறுப்பினர்கள் இது குறித்து பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தனர்.

COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமண்யன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்ட போதிலும், 74 வயதான SPB பிற உடல்நலச் சிக்கல்களால் செப்டம்பர் 25 அன்று காலமானார்.

பாடுவதைத் தவிர, பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் எஸ்பி பாலசுப்பிரமணியம் பல பிரபலமான நட்சத்திரங்களுக்காக டப்பிங்கில் குரல் கொடுத்திருக்கிறார். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் (SP Balasubrahmanyan) மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் மிக மோசமாக வருத்தப்படுத்தியது. பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமண்யன் தனது ஐம்பது ஆண்டு கால அற்புதமான இசை பயணத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

ALSO READ: Miss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ!!

More Stories

Trending News