)
Latest News In Karuru : கரூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு படுகொலை. அவரது கணவர் மாயமானதால் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது, நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட் மூலம் பீகாரை சார்ந்த தர்மாத் குமார் என்கின்ற சாந்த்மதி தேவி என்ற பெண்ணும் அவருடைய கணவர் மற்றும் தம்பி என்பவருடன் கடந்த 1ம் தேதி வேலைக்கு சேர்ந்து பால் பண்ணையிலேயே தங்கி இருந்துள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் அவர்கள் தங்கி இருந்த இடத்தில் அந்தப் பெண்ணின் கணவர் அப்பெண்ணை அடித்தாக கூறி அவரது தம்பி அருகில் தங்கி வேலை பார்க்கும் தமிழ்நாட்டை சார்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து பால்பண்ணை உரிமையாளர் மற்றும் அருகில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது அப்பெண்ணின் உடல் கிடந்துள்ளது, அவரது கணவர் மாயமாகி இருந்தார்.
இது தொடர்பாக பால் பண்ணையின் உரிமையாளர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் தம்பியிடம் போலீசார் விசாரணை மேற்கொள்வதுடன், மாயமான அவரது கணவன் மற்றும் அழைத்து வந்த வடமாநில ஏஜெண்டையும் தேடி வருகின்றனர். பால் பண்ணைக்கு வேலைக்கு சேர்ந்த 2 நாளிலேயே வடமாநில பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ