Premalatha Vijayakanth : மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, பிரேமலதா விஜயகாந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து பேசினார். அப்போது வாக்களிக்க வேண்டிய சின்னத்தை மாற்றி கூறினார்.
பிரேமலதா பிரச்சார கூட்டத்தில் பேசியது என்ன?
“பிரச்சார இடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்து சமாதான புறாவை பறக்க விட்டு பிரச்சாரத்தை துவங்கி பேசினார் உங்கள் மகன் விஜய பிரபாகரனுக்கு சென்று வேலை பார்க்கவில்லையா என கேட்டனர் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் , எனது பிள்ளைகள் தான் விஜயகாந்தின் வாரிசுகள் தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட கூட்டணி.”
வாக்குறுதிகள்:
- வெற்றிப்பெற்றவுடன் கொருக்குப்பேட்டை ரயில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- ராயபுரம்- கொருக்குப்பேட்டை 4 வது ரயில் முணையம் பயன்பாட்சிற்கு கொண்டு வருவோம்.
- கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது, எதிர்காலம் கஞ்சாவால் கேள்வி குறீயாகி உள்ளது.
- கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் திமுகவினர் எனவே போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவார் நமது கூட்டணி வேட்பாளர்.
- கச்சத்தீவு விவகாரம் பழைய பஞ்சாகத்தை பேசி வாழும் மக்களுக்கு எதையும் மோடி செய்யவில்லை.
- தகுதி இருக்கும் இல்லை பெண்களுக்கு 1000 ரூபாய் என பாரபட்சம் காட்டுகிறார்கள், பலருக்கு தகுதி இல்லை என நினைக்கிறார்களா?
- பாடம் புகட்ட வேண்டும், இலவச பேருந்து மக்கள் கேட்கவில்லை, ஆனால் திமுக ஏமாற்று வேலை செய்கிறது.
- பின் தங்கிய தொகுதியாக ஆர் கே நகர் உள்ளது. இந்த தொகுதியயை தரம் உயர்த்த வேண்டும், காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டும் அதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் படிக்க | திமுக, பாஜக குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா
தொடர்ந்து பேசிய அவர், “மனோ குரல் மக்கள் குரலாய் டெல்லியில் ஒலிக்கும் . இந்த கூட்டணி,மகத்தான கூட்டணி, மக்கள் கூட்டணி, தாய்மார்கள் போற்றும் கூட்டணி. கேப்டன் மறைவிற்கு பிறகு சந்திக்கிற முதல் கூட்டணி. கேப்டனுக்கு வழி நெடுக அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. கேப்டன் மறைவிற்கு பிறகு நான் எங்கும் செல்ல வில்லை, எடப்பாடி கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கூட்டணி தர்மத்தை மதித்து 40 தொகுத்திக்கும் நேரடியாக செல்ல உள்ளேன்”
மேலும், “பிரஷாந்த் கிஷோர் அதிமுக- தேமுதிக கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல என திமுகவை எச்சரித்துள்ளார். 40 தொகுதியில் 30 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம் என கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். தேர்தல் போரில் தர்மம் வெல்லுமா? அதர்மம் வெல்லுமா? தர்மம் தான் வெல்லும். உங்கள் கூட்டணி 4 பேர் தான் உள்ளார்கள் என கேள்வி கேட்கிறார்கள். 7 பேரு இருந்தா அலங்கார கூட்டணி, நமது 4 பேரு கூட்டணியில் மக்கள் ஆதரவான பலமான கூட்டணி. கடந்த கால தேர்தலில் ஜெயா- விஜயா அமைத்த இதே கூட்டணி வரலாற்று வெற்றி பெற்றது அதே போல வரலாற்று வெற்றி இந்த தேர்தலில் நமது கூட்டணிக்கு தான்” என்று கூறினார்.
தவறுதலாக சின்னத்தை மாற்றி கூறினார்..
முரசு சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என தவறுதலாக கூறிய பிரேமலதா விஜயகாந்த், பின்னர் முரசு என கூறி தவறாக கூறிவிட்டேன் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என கோரிக்கை வைத்தார். உங்கள் மகன் விஜய பிரபாகரனுக்கு சென்று வேலை பார்க்கவில்லையா என கேட்டனர் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் , எனது பிள்ளைகள் தான் விஜயகாந்தின் வாரிசுகள் தான் என பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ