ஈரோடு எம்பி கணேசமூர்த்தி விஷம் அருந்த இது தான் காரணமா? அதிர்ச்சி தகவல்!

பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சோகத்தில் இருந்ததால் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி விஷம் அருந்தி உள்ளார் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 25, 2024, 10:36 AM IST
  • சீட் தராததால் மனமுடைந்து தற்கொலை.
  • விஷம் அருந்தி தற்கொலையில் ஈடுபட்டுள்ளார்.
  • தற்போது கோவை மருத்துவமனையில் அனுமதி.
ஈரோடு எம்பி கணேசமூர்த்தி விஷம் அருந்த இது தான் காரணமா? அதிர்ச்சி தகவல்! title=

ஈரோடு தொகுதியின் தற்போதைய எம்பியாக உள்ள அ.கணேசமூர்த்தி மதிமுகவை சேர்ந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்த போது திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று திமுக எம்பியாக உள்ளார். இதையடுத்து தற்போது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதிலும் எம்பி கணேசமூர்த்தி வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் கணேசமூர்த்தி மூர்த்தி தீடிரென மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மேலும் படிக்க | 'பைத்தியம் இல்லை, உங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்துள்ளேன்' - திமுகவுக்கு தமிழிசை பதிலடி!

இதன் பின்னர் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர்., இருப்பினும் உடல் நலம் கருதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இதற்கு முன்னதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனமுடைந்த நிலையில் கணேசமூர்த்தி இருந்து வந்தாகவும் இதனால் சல்பாஸ் எனப்படும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினர் மத்தியில் எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எம்பி கணேசமூர்த்தி உடல் நலம் குறித்து விசாரிக்க அதிமுக திமுக பாஜக என அனைத்து கட்சியை சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்றத் உறுப்பினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கோவை கே எம் சி ஹெச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை நேரில் சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார் மதிமுக பொது செயலாளர் வைகோ. கணேசமூர்த்தியை பார்வையிட்டு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த வைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கண்ணின் மணியாக திகழ்ந்தவர் ஆருயிர் சகோதரர், தோழர் கணேசமூர்த்தி அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர், என்றும் சட்டமன்ற உறுப்பினரானார், 3 முறை நாடாளுமன்ற உறுப்பினரானார் என்றும் புகழாரம் சூட்டினார். இம்முறை பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியில் அனைவரும் துரை வைகோ என சொன்னபோது நான் ஏற்கவில்லை.

வாக்கெடுப்பு நடந்தி அதிலும் 99% வாய்ப்பு வழங்கியது போது கூட்டனியில் 2 இடங்கள் வாங்கி ஒன்று துரை வைகோ மற்றொன்று கணேசமூர்த்திக்கு என்று கட்சியில் சொன்னார்கள், ஆனால் அது முடியாதபோது காயம் ஆரிய பிறகு அடுத்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி நல்ல தொகுதியை பார்த்து சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வைத்து அடுத்து பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன் எனவும் தெரிவித்தார். அதன் பின்னும் தன்னிடம் பிரியமாக பேசிய கணேசமுர்த்தி இது குறித்து தனது மகன் மகள் ஆகியோரிடையே எதையும் காட்டிக்கொள்ளாத போது பதட்டமும் இல்லாமல் சோகத்தில் உள்ளதை போல தெரியாத அளவிற்கு இருந்து தென்னை மரத்திற்கு போடும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார் என்றார்.

மேலும் அங்கு வந்த கபிலன் என்பவரிடம் "நான் போய்ட்டு வருகிறேன்" என்று சொல்லியுள்ளார் என்று குறிப்பிட்ட வைகோ, கணேசமூர்த்தியை காப்பாற்ற 50:50 வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சைக்கு வருபவர்கள் பிழைத்துள்ளார்கள். அதற்குண்டான சிகிச்சை வசதிகள் தங்கள் மருத்துவமனையில் இருப்பதாகவும் நம்பிக்கையுடன் இருங்கள் என தன்னிடமும், அவரது உறவினர்களிடமும்  மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் எனவும் வேதனையுடன் கூறினார். 2 நாட்கள் போகட்டும் என மருத்துவர்கள் சொல்லியுள்ளனர் எனவும் நஞ்சை முறிக்க மருந்து கொடுத்துள்ளதுடன் எக்மோ கருவி வைத்துள்ளனர் எனவும்  நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் நம்பிக்கை வையுங்கள் என சொல்லியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ’தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால்..’ தேனி மக்களுக்கு உதயநிதி கொடுத்த புதிய வாக்குறுதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News