Latest News Chennai Weather : கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை வெயில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுட்டெரித்து வந்தது. வெயிலால் அவதிப்பட்ட மக்கள், எப்போதுதான் மே மாதம் முடியுமோ என்று காத்துக்கொண்டிருந்த சமயத்தில் அதன் உச்சமாக கத்தரி வெயில் ஒரு காட்டு காட்டியது. இதுவரை இல்லாத அளவிற்கு, கத்தரி வெயில் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டில் இருந்தது. ஒரு வழியாக தற்போது மே மாதம் முடிந்து ஜூன் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், வெயிலும் படிப்படியாக குறைந்து மழை பெய்ய துவங்கியிருக்கிறது.
சென்னையில் கனமழை:
கோடை வெயிலில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், அவை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கூடியதாக இல்லை. தற்போதுதான் அந்த வெப்பமான சூழ்நிலை சற்று மாறியிருக்கிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். குறிப்பாக, நேற்றைய தினம் சென்னையின் முக்கிய பகுதிகளில் மதியம் முதல் மாலை வரை சில மணி நேரங்களுக்கு விடாது இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெயிலால் வாடி வதங்கியவர்களுக்கு, இந்த மழை கொடுத்த குளிர்ச்சி இன்பத்தை அளித்தது. நேற்றைய தினம் பெய்த மழையினால் மட்டும், செம்பரம்பாக்கத்தில் 8.5 செ.மீ அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னையில் மழை நின்றாலும் தற்போது தொடங்கியுள்ள புதிய பிரச்சனை!
மழைக்கு வாய்ப்பிருக்கிறதா?
சென்னை வானிலை ஆய்வு மையம் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கிருஷ்ணகிரி, தருமபுரி,நாமக்கல், சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கண்ணியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 5, 2024
சென்னையில் நேற்று மழை பெய்த நிலையில், தற்போது தெளிவான வானிலையே காணப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மழை குறித்த அப்டேட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விரைவில் வெளியிடும். வானிலை குறித்து தெரிவிக்கும் சில தனியார் நிறுவனங்கள், வேலூரில் இன்றி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கின்றன. சென்னையில், மிதமான மழை பெய்ய வாய்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Chennai Rains : சென்னையில் வெளுத்துக்கட்டும் மழை! எப்போது வரை நீடிக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ