சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - 9 காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு!

சட்டக்கல்லூரி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் 9 காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 03:29 PM IST
  • போலீசார் ரஹீமை தடுத்து நிறுத்தி முகக் கவசத்தை ஒழுங்காக அணியாததால் அபராதம் கட்டுமாறு தெரிவித்துள்ளனர்.
  • ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.
சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - 9 காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு!  title=

சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவர் கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு பணி முடிந்து அவர் வீடு திரும்பும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி முகக் கவசத்தை ஒழுங்காக அணியாததால் அபராதம் கட்டுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் தான் முகக்கவசம் அணிந்திருப்பதால் அபராதம் கட்ட முடியாது என மாணவர் தெரிவித்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்படவே மாணவர் ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் (TN Police)அழைத்துச் சென்று அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும், முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. 

ALSO READ | சட்டக் கல்லூரி மாணவர் தாக்குதல்! 2 போலீசார் டிரான்ஸ்பர்

தன்னை நிர்வாணப்படுத்தி இரவு முழுவதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், பீரோவில் முட்டி தாக்கியதில் தையல் போடும் அளவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், தனது முகத்தில் காவல்துறையினர் சிறுநீர் கழித்ததாகவும் கூறி மாணவர் அளித்த புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக உத்திரகுமரன், பூமிநாதன் ஆகிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர். இதனிடையே மாணவர் மீதான தாக்குதலுக்கு காவல் ஆய்வாளர் நசீமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஓட்டேரி காவல் நிலைய வளாகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

law

இதனையடுத்து மாணவர் ரஹீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நசீமா உட்பட 9 காவல்துறையினர் மீது IPC 294(b), 323, 324 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக உத்திரகுமரன், பூமிநாதன் ஆகிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | அடிச்சிட்டான்யா அடிச்சிட்டான்!! ஆட வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News