மன்மோகன் சிங் காலமானார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு, அண்ணாமலை சவுக்கடி போராட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்

Sat, 28 Dec 2024-6:34 am,

Tamil Nadu News Live: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கடி போராட்டம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Today  Tamil Nadu News Live: நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு மத்திய அரசு சார்பில் முழு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். மன்மோகன் சிங் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். 


இதேபோல் தமிழ்நாட்டில் ஐஐடி மாணவி பாலியல் வழக்கு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தை அறிவித்துள்ளன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கடி போராட்டம் நடத்துகிறார் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே (Zee News Tamil) தெரிந்து கொள்ளலாம்.

Latest Updates

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link