வேளாண் பட்ஜெட் தாக்கல்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2023 -24 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கம் செய்தார். அப்போது சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது, மானியம் உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்டதாரிகளுக்கு கடன்
விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 200 வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண்மை சார்ந்த தொழில் தொடங்க தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 200 பேருக்கு கடன் வழங்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்காக தமிழக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே 185 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் அக்ரி கிளினிக்குள் தொடங்க ஊக்குவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஆடு - மாடு பண்ணை வளர்ப்பு
அதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. ஏற்காடு அரசு தாவரவியல் பூங்கா மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் விதை திருவிழா நடத்தப்பட இருப்பதுடன், ஆடு, மாடு, தேனிவளர்ப்புக்கான ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் விவசாயிகள்கு மா, பலா, கொய்யா கன்று இலவசமாக வழங்கப்பட உள்ளது.
சிறுதானிய உற்பத்தி மானியம்
வரும் ஆண்டில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் தென்னை மரம் இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 வீதம் வழங்கப்படும் 15 லட்சம் தென்னை மர கன்றுகள் வழங்கப்படும். நாமக்கல், திருப்பூர், கோவை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலம் உருவாக்கப்படும். கேழ்வரகு, கம்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும். 50,000 ஏக்கரில் சிறுதானிய உற்பத்திக்கு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும். சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ. 82 கோடி ஒதுக்கீடு. சிறுதானிய திருவிழாக்கள் வரும் ஆண்டு நடத்தப்பட இருக்கின்றன.
நம்மாழ்வார் பெயரில் விருது
அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நம்மாழ்வார் பெயரில் விருது, 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அமைக்க 50 கோடி நிதி. 300 ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளின் வயல்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் இணைப்பு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ