தமிழக நிதிநிலை அறிக்கை 2023-ஐ அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-ஐ அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது விவசாயிகள் மற்றும் வேளாண்துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-ல் வெளியிட்ட அறிவிப்புகள்
சிறுதானிய உற்பத்திக்கு மானியம்
வரும் நிதியாண்டில் 2504 ஊராட்சிகளில் அனைத்து கிராம வளரச்சி திட்டத்தில் 203 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் தென்னை மரம் இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 வீதம் வழங்கப்படும் 15 லட்சம் தென்னை மர கன்றுகள் வழங்கப்படும். நாமக்கல், திருப்பூர், கோவை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலம் உருவாக்கப்படும். கேழ்வரகு, கம்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும். 50,000 ஏக்கரில் சிறுதானிய உற்பத்திக்கு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும். சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ. 82 கோடி ஒதுக்கீடு. சிறுதானிய திருவிழாக்கள் வரும் ஆண்டு நடத்தப்படும்.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2023: ரியல் எஸ்டேட் துறைக்கு பம்பர் பரிசு கொடுத்த பிடிஆர்
நெல் பராமரிப்புக்கு ஊக்கத் தொகை
மாநில வேளாண் வளர்ச்சி நிட்டங்களுக்கு 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. பாரம்பரிய நெல்களை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு தலா 3 லட்சம் வீதம் 10 விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும். 6 லட்சம் ஏக்கரில் நெல்லுக்கு பின் மாற்றுபயிர் நடவு செய்ய ரூ. 24 கோடி ஒதுக்கீடு. வேளாண்மை பயின்ற மாணவர்கள் சுயதொழில் செய்திட 200 மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம்- 4 கோடி ஒதுக்கீடு. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். 60,000 சிறு, குறு நிலமற்ற விவசாயிகளுக்கு வேளாண் கருவி வாங்க 24 கோடி ஒதுக்கீடு. 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்திட ரூ. 1 கோடி ஒதுக்கீடு
நம்மாழ்வார் பெயரில் விருது
அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நம்மாழ்வார் பெயரில் விருது, 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 32 மாவட்டங்களில் 14.500 ஏக்கர் பரப்பளவில் 725 தொகுப்புகள் உருவாக்கம். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணம் ரூபாய் 10 ஆயிரம் மானியம் வழங்க ரூபாய் 26 கோடி ஒதுக்கீடு. நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அமைக்க 50 கோடி நிதி. 300 ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளின் வயல்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் இணைப்பு வழங்கப்படும். 82 கோடியில் முதலமைச்சரின் சிறு தானிய இயக்கம் 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்
வேளாண் தொடர்பான அறிவிப்புகள்
கரும்பு விவசாயிகளுக்கு நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும். மதுரை மல்லி போல் விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் 4300 ஏக்கர் பரப்பளவில் மல்லி சாகுபடி செய்யப்படும். தேனி, திண்டுக்கல் முருங்கை இயக்கத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு. தக்காளி உற்பத்தியை அதிகரிக்க 19 கோடி நிதி ஒதுக்கீடு. வெங்காய உற்பத்தி அதிகரிக்க 29 கோடி ஒதுக்கீடு. கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை சாகுபடி செய்ய 2.5 கோடி ஒதுக்கீடு. தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் ஆயிரம் எக்டரில் சாகுபடியினை உயர்த்திட 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம் அமைக்கப்படும்
ஆடு - மாடு வளர்ப்புக்கு நிதி ஒதுக்கீடு
ஏற்காடு அரசு தாவரவியல் பூங்கா மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் விதை திருவிழா. சென்னை மாதவரம் தோட்டகலை பூங்கா விரிவாக்கத்திற்கு 5 கோடி. சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்காவிற்கு இரண்டு லட்சம் பேர் ஆண்டுதோறும் வருகை புரிகின்றனர். இந்த பூங்காவை மேலும் அழகுபடுத்தி பார்வையாளர்களை கவரும் வகையில், இசைக்கேற்ப அசைந்தாடும் நீரூற்றுகள், பூங்கா விரிவாக்கம் போன்றவை 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். ஆடு, மாடு, தேனிவளர்ப்புக்கான ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. 10 லட்சம் விவசாயிகள்கு மா, பலா, கொய்யா கன்று இலவசமாக வழங்கப்படும்
மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை... அரசு ஊழியர்களின் நிலை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ