தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கான பதவிகாலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் இன்னும் இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்தபாடில்லை.
முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இப்பதவிகளுக்கான
நடத்தப்பட இருந்தது ஆனால் சில காரணங்களால் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்தது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என கூறியுள்ளது.