சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய அந்த ரயிலானது கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. இதில் ரயில் நிலைய நடைமேடையின் மீது மோதிய மின்சார ரயில் அதில் ஏறி சென்று ஒரு கடையின் சுவற்றின் மீது மோதி ரயில் நின்றுள்ளது. இதனால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
மேலும் படிக்க | சென்னையில் நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்
அதிர்ஷ்டவசமாக பணிமனையில் இருந்து வந்த ரயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. மேலும் இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியது.
பணிமனையில் இருந்து நடைமேடை 1 யை நோக்கி பயணிக்கும் போது, நடைமேடையில் ஏறியது.
ரயிலை இயக்கிய ஓட்டுநர் ரயிலை விட்டு குதித்து தப்பித்தார்.
இந்த விபத்தில் நடைமேடை மேற்கூரை மற்றும் சில கடைகள் சேதமடைந்தது. pic.twitter.com/34ymxcZ2bi
— தமிழக ரயில் செய்திகள் | Tamil Nadu Rail News (@TN_RailNews) April 24, 2022
இந்த நிலையில் இதுதொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டது. ரயில் ஓட்டுநர் பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவித்தார். சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய மின்சார ரயிலின் பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
மேலும் நேற்று விடுமுறை நாளாக இருந்த நிலையில் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் குறைவான மக்கள் கூட்டமே இருந்ததால் பெரும் அசம்பாவீதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் படிக்க | அரசு விடுதிக்குள் ஆட்சியர் திடீர் ‘ரெய்டு’ - வசமாக சிக்கிய வார்டன்.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR