சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு பணிமனையில் இருந்து மின்சார ரயில் வந்துள்ளது. தாம்பரம் செல்வதற்காக வந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட மின்சார ரயில், நடைமேடையில் ஏறி, மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் விபத்துக்குள்ளாகியுள்ள வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில், ரயில் பெட்டிகள் ரயில் நிலைய கூரை மற்றும் நடைமேடை சுவர்களில் கடுமையான மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
நல்வாய்ப்பாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநரும் ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். விபத்து குறித்து வெளியாகியுள்ள முதல் கட்ட தகவலில், பிரேக் பிடிக்காததால், ஓட்டுநர் ரயிலில் இருந்து குதித்ததாகவும், இதனால் ரயில் தடம் புரண்டு விபத்தை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே அதிகாரிகளும், காவல்துறையினரும் விரைந்துள்ளனர்.
மேலும் படிக்க | அரசு விடுதிக்குள் ஆட்சியர் திடீர் ‘ரெய்டு’ - வசமாக சிக்கிய வார்டன்.!
மின்சார ரயில் விபத்துக்குள்ளானதையடுத்து சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையிலான ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மற்றும் மின்சார லைன் சரிசெய்த பிறகே ரயில்கள் இயக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. விடுமுறை நாளான இன்று மெரினா கடற்கரைக்கு பெருமளவில் புறநகர் ரயில்களிலேயே மக்கள் வந்து செல்வார்கள். இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள விபத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
மேலும் படிக்க | பரிகாரம் செய்வதாக மாணவியை பலாத்காரம் செய்த பூசாரி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR